இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போல நடத்துவதாகவும் தொகுதி மறு வரையறை குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சப்பைக்கட்டு கட்டுகின்றனர் என அமைச்சர் நாசர் குற்றச்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு தொகுதி மறுவரையரை செய்வதை எதிர்த்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசுகையில்,” பன்முக தன்மை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.இதனை சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. எத்தேச அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலை செய்கிறது.மேலும் மோடி அரசு தென்னிந்திய மாநிலங்களை வஞ்சித்து, இந்தி போசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போன்று நடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளாா்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்.பி களை நாகரீகமற்றவர்கள் என கூறியது ,தரம் கெட்ட செயல் என சாடினார். தமிழகத்திற்கு தரவேண்டிய GST ஈவு தொகையை தரவில்லை, 100 நாள் வேலை நிதி 4000 கோடியை தரவில்லை. தமிழ் மொழிக்கு எந்த அளவுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு குந்தகம் விளைவிகின்றனர். இந்தி கற்றுக்கொள்ள கூறி வற்புறுத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் நம்முடைய உரிமை குரலை ஒலிக்க செய்ய முடியாத சூழலை மறு வரையறை உருவாக்கும் என கூறியவர். 40க்கு 40 என முழுவதும் வெற்றி பெற்று இருக்கும் சூழலில் கூட நம்மை பேச விடாமல், பேச வாய்பளிக்காமல் இருந்து வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிய அரசு மெளனம் காக்கின்றனர். பிரதமர் மோடியும்,உள்துறை அமைச்சர் அமித்சாவும் சப்பை கட்டு கட்டுகின்றனர். உறுதியாக எதையும் கூறாமல் இருந்து வருகின்றனர். நாடாளுமன்றம் தொகுதி குறைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல அரசியல் பலம், உரிமை மட்டுமல்ல எதிர்காலத்தை வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்லும். குறைவான அரசியல் பிரதிநிதிகள் இருந்தால் நியாமன கொள்கைகளை பாதுகாப்பதிலும், மக்கள் தேவைகளுக்கு நிதியை கேட்டு பெறுவதிலும் கடுமையான சவால் உருவாகும். இதனை முறியடிக்க தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் திராவிட மாடல் அரசு போராடி வெற்றி பெரும் என்பதில் மாற்று கருத்து இல்லை என கூறினார். எங்கு எது நடந்தாலும் முதல் உரிமை குரல் தமிழகத்தில் இருந்து வரும்” என தெரிவித்துள்ளாா்.
பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு