Homeசெய்திகள்இஸ்லாமியர் அவதாரம் எடுத்த பாஜக வேட்பாளர் ராம்வீர்: ஓட்டுக்காக மாறிய கெட்-அப்

இஸ்லாமியர் அவதாரம் எடுத்த பாஜக வேட்பாளர் ராம்வீர்: ஓட்டுக்காக மாறிய கெட்-அப்

-

- Advertisement -
kadalkanni

உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள குந்தர்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வேட்பாளர் தாக்கூர் ராம்வீர் சிங். முஸ்லீம்கள் தொடர்பான நிகழ்ச்சிக்கு சென்ற ராம்வீர், தலையில் வலை தொப்பியை அணிந்திருந்தார். சவுதி பாணியில் கைக்குட்டையை கழுத்தில் போட்டிருந்தார். பைஜான் லுக்கில் உள்ள அவரது புகைப்படங்கள் வெளியானதையடுத்து, எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகின்றன. அங்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 23-ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

உ.பி.யின் சிறுபான்மை மோர்ச்சா தலைவர் குன்வர் பாசித் அலி, பாஜக வேட்பாளர் ராம்வீர் தாக்கூரை ஆதரித்து முஸ்லிம்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இங்கு வந்த முஸ்லிம் வாக்காளர்கள் கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்தனர். பா.ஜ.க தலைவரின் வேண்டுகோளின்படி இங்கு வந்த முஸ்லிம்கள் கைகளை உயர்த்தி கடவுள் பெயரில் சத்தியம் செய்து ராம்வீருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வதாக உறுதியளித்தனர்.

அப்போது குண்டர்கி வேட்பாளர் ராம்வீர், குரான் வசனங்களை படித்து தனது உரையை தொடங்கினார். நெட்டட் தொப்பியும் கழுத்தில் பெரிய கைக்குட்டையும் அணிந்திருந்தார். பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் காஃபிர்கள் என்ற தவறான எண்ணத்தை முஸ்லிம் சகோதரர்கள் கைவிட வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

60 சதவீத முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட குண்டர்கி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 11 பேர் முஸ்லீம்கள். பாஜகவின் ராம்வீர் சிங் மட்டுமே இந்து வேட்பாளர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரசை குறி வைத்து, ஒரு பக்கம் யோகியும், பா.ஜ.க.வும் ‘‘பிரிந்தால் வெட்டி விடுவோம்’’ என பேசிக்கொண்டிருக்க மறுபுறம் குந்தர்கியில் பா.ஜ.க வேட்பாளர்களே முஸ்லீம் கெட்அப்பில் வருகிறார்.

MUST READ