பிளடி பெக்கர் படத்திலிருந்து நான் யார் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் கவின், சரவணன் மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை கடந்த சினிமாவில் இவர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் நட்புன்னா என்னன்னு தெரியுமா போன்ற படங்களில் ஹீரோவாக களமிறங்கி ரசிகர்களை ரசிக்க வைத்தார். இருப்பினும் கடந்த ஆண்டு கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின் நடித்திருந்த டாடா திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிவதற்கு காரணமாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் மாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் நெல்சன் திலீப் குமாரின் பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிளடி பெக்கர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தினை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சுஜித் சாரங் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.
இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு விச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நான் யார் எனும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த பாடலை ஆர் கே ஹரிபிரசாத் ரமணி பாடியுள்ள நிலையில் விஷ்ணு எடாவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.