spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பார்ப்பானிய ஊழல்: ஜெ-முதல் ஹெச்.ராஜா மாமா வரை... ‘நடிகை’கஸ்தூரிக்கு சம்மட்டி அடி

பார்ப்பானிய ஊழல்: ஜெ-முதல் ஹெச்.ராஜா மாமா வரை… ‘நடிகை’கஸ்தூரிக்கு சம்மட்டி அடி

-

- Advertisement -

‘‘மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறித்தியதால் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை இல்லை இல்லை. தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன்’’ என்று கெஞ்சி வருகிறார் நடிகை கஸ்தூரி.

kasturi
kasturi

இதனைத் தொடர்ந்து தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, திறமை அடிப்படையில் (பிராமணர் அல்லாதார்) பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர் என்ற தொனியில் பேசிய கருத்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

இது குறித்து கஸ்தூரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தனது முக நூல் பதிவில், ‘‘ஊழல் செய்வதில் ஜாதி வித்தியாசமில்லை. ஆனால், உயர் பதவிகள் வாய்ப்பு முதன்முதலாக பிராமணர்களுக்கு தான் வாய்க்கிறது என்ற வகையில் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை பிராமணர்கள் நிறையவே ஊழல் செய்து அம்பலப்பட்டுள்ளனர்.

கோவில்கள் எல்லாம் பார்ப்பன அர்ச்சகர்கள் வசம் இருக்கையில் கோவில் நிலங்களையும், சாமி நகைகளையும் கணக்கற்ற வகையில் களவாண்ட பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து தமிழகத்தின் முதல் முதலமைச்சரும், நேர்மையின் சிகரமாகவும் திகழ்ந்த ஒ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் மனம் நொந்து அன்று சட்டசபையில் பேசியவை இன்னும் அவைக் குறிப்புகளில் உள்ளன.

அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரானவர் கொலை!

சுதந்திர இந்தியாவின் கேபினெட் அமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தான் இந்தியாவின் முதல் மாபெரும் முந்த்திரா ஊழலில் அடிபட்டு அசிங்கப்பட்டு, பிரதமர் நேருவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியவர். இதனால், அவர் பதவி விலக நேர்ந்தது.

மிகச் சமீபத்தில் பங்கு சந்தையின் பல லட்ச ஊழல்களில் சம்பந்தப்பட்டு சிறை சென்ற சித்ரா ராமகிருஷ்ணன் ஒரு பாப்பாத்தியாவார். ஊழலுக்காக சிறை சென்ற முன்னள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊழலில் எந்த அரசியல்வாதிக்கும் சளைத்தவர் அல்ல!

நிறைய ஊழல் செய்தும், வங்கிகளை திவாலாக்கியும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா பார்ப்பனரே! சிலை திருட்டில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் போடப்பட்டு கைதாகாமல் தன் செல்வாக்கால் தப்பித்துக் கொண்டவர் டி.வி.எஸ் வேணு சீனிவாசன்.

பசுமை புரட்சி என்ற பெயரில் பசுமை சூறையாடலை நிகழ்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜனாவிற்கு விவசாய லாபத்தை கொண்டு சென்ற வரும், இந்தியாவில் பல லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமானவரும், மாபெரும் விஞ்ஞானி ரிச்சாரியா அவர்களின் ஆய்வு கூடத்தில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை களவாண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதனைவிட ஈவு இரக்கமற்ற ஊழல்வாதி இன்னொருவரில்லை.கட்சி தொடங்கிய விஜய்..... சர்ச்சையைப் பற்ற வைத்த பிரபல நடிகை!

அவ்வளவு ஏன்? இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஊழல் தொழில் அதிபர்களுக்கெல்லாம் ஆடிட்டராக, ஆலோசகராக திகழும் துக்ளக் குருமூர்த்தி பார்பனரே! அதானி, அம்பானி தொடங்கி மிகப் பெரிய தொழில் அதிபர்களின் ஆடிட்டர்களில் கணிசமானோர் பார்பனர்களே. அம்பானியின் ஆடிட்டர் எச்.ராஜாவின் மாமா தான்!

இவை எல்லாம், ’’ஊழலில் சாதி பாகுபாடில்லை’’ எனச் சொல்வதற்காக நான் கூறிய சின்ன சாம்பிள் தான். ’’ஒப்பீட்டளவில் பார்பனர்களில் ஊழல் செய்வோர் குறைவு’’ என யாராவது முட்டுக் கொடுக்க வந்தால், புத்தகம் எழுதுமளவுக்கு பார்பனர்களின் ஊழல் பட்டியலை சொல்ல வேண்டியதாகிவிடும். எச்சரிக்கை’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ