விருகம்பாக்கத்தில் டிப்டாப்பாக வந்து பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை.
வீட்டின் உரிமையாளரின் மனைவி வந்ததும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கிருந்து தப்பிய கொள்ளையனால் விருகம்பாக்கம் பகுதியே பெரும் அதிர்ச்சியில் உள்ளது.


செல்போன் பேசியப்படியே முகத்தை மறைத்துகொண்டு கொள்ளையன் வரும் காட்சியும், கொள்ளை அடித்து விட்டு தப்பியோடும்போது பெண் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன்(35), திமுக நிர்வாகியான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சரோஜா(30), இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்த தனது மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்க்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஓடி வந்து சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த மூன்று பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அதில் டிப்டாப்பாக வரும் வாலிபர் ஒருவர் போன் பேசியப்படியே சர்வ சாதரணமாக நடந்து வந்து, கண்காணிப்பு கேமரா இருக்கும் இடத்தில் முகத்தை மறைத்தப்படியே அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதும், பின்னர் கொள்ளை அடிக்கும் போது கையும் களவுமாக சிக்கி கொண்டதால் கத்தியை வைத்து மிரட்டினார்.

பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்தபோது வீட்டின் உரிமையாளர் வந்ததால் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


