spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகரூர் சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் முழு காரணம் - வீரலட்சுமி ஆவேசம்

கரூர் சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் முழு காரணம் – வீரலட்சுமி ஆவேசம்

-

- Advertisement -

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பிரபல youtuber சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார்.கரூர் சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் முழு காரணம் - வீரலட்சுமி  ஆவேசம்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்ததற்கு நடிகர் விஜய் மட்டுமே முழு காரணம் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்ததற்கு 100% நடிகர் விஜய் மட்டுமே காரணம். அவர் தனது அரசியல் கட்சிக்காக வாரத்தில் ஒரு நாள், அதுவும் சனிக்கிழமையில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார். கிராமப்புறங்களில் சனிக்கிழமை சந்தை கூடும் நாள் என்பதால், அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு திட்டமிட்டு அந்த நாளை தேர்வு செய்துள்ளார்.

சந்தை நடைபெறும் இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஒரு அரசியல் கட்சி தலைவர் பங்கேற்கும் கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கட்சியின் கடமை. ஆனால், தமிழக வெற்றி கழகம் தனது தொண்டர் படையையோ அல்லது பாதுகாப்பு படையையோ முறையாக பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். கூட்டத்திற்கு காலை 11:30 மணிக்கு வருவதாக கூறிவிட்டு, இரவு 7:40 மணிக்கு வருகிறார். இந்த காலதாமதத்தால் கூட்டம் அதிகரித்தது. அவர் தனது பாதுகாப்பிற்காக துபாய் பவுன்சர்களையும், துப்பாக்கி ஏந்திய போலீசாரையும் வைத்துள்ளார். ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை பற்றி அவர் கவலைப்படவில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார்.

we-r-hiring

எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், கூட்டம் நடத்தும்போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, தமிழக வெற்றி கழகத்திற்கு இனிமேல் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.உயர்தர போதை பொருள் பயன்படுத்துவோர் இதுபோன்ற சம்பவம் நடந்தால் எப்படி பயந்து ஓடுவார்களோ அது போன்று விஜய் நடந்து கொண்டார் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து விடலாம் என்கிற அச்சத்தில் தான் அவர் வந்தது போல் இருந்தது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயை ஏன் கைது செய்யக் கூடாது? அறிவழகன் கேள்வி

MUST READ