spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..

-

- Advertisement -
மெட்ரோ ரயில் சேவை
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவ. 12) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் மற்றும் படித்து வரும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அவ்வாறு சொந்த ஊர் செல்ல விரும்புபவர்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை சனிக்கிழமை ( நவ. 11) வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

Metro Train Service Statement
நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு
மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ இரயில் தெரிவித்துக்கொள்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ