spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவிமான நிலையத்திற்கு அருகிலேயே விமானத்தை பார்க்கிங் செய்யவேண்டும் - மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

விமான நிலையத்திற்கு அருகிலேயே விமானத்தை பார்க்கிங் செய்யவேண்டும் – மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

-

- Advertisement -

விமான நிலையத்தில் பார்கிங் கட்டணத்தை விமான நிர்வாகம் குறைப்பதற்காக தொலை தூரத்தில் விமானத்தை நிறுத்திவிடுகின்றனா். இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.விமான நிலையத்திற்கு அருகிலேயே விமானத்தை பார்க்கிங் செய்யவேண்டும் - மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்களில் மக்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது. விமான நிலையத்தில் பார்கிங் கட்டணத்தை விமான நிர்வாகம் குறைப்பதற்காக தொலை தூரத்தில் விமானத்தை நிறுத்திவிடுகின்றனர். இதனால் விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு பேருந்து மூலம் நீண்ட தூரம் செல்ல இருக்கிறது. இந்த பேருந்து பயணம் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் நேரம் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தில் ஏற முடியவில்லை. பேருந்து பயணம் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நீண்ட தூரத் நின்று கொண்டே செல்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பார்க்கிங் கட்டணத்தை குறைக்க விமான நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் விமானத்தை விமான நிலையத்திற்கு அருகிலேயே பார்க்கிங் செய்யவேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு தமிழக மருத்துவத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளாா்.

தமிழகத்தில் 6,39,40,209  கோடி வாக்காளர்கள்

we-r-hiring

MUST READ