Homeசெய்திகள்சென்னைசென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

-

- Advertisement -

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, இன்று மேலும் இரண்டு முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக பொறுப்புகளை ஏற்க உள்ளார்.

we-r-hiring

இதற்கு முன் சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த அபின் தினேஷ் மொடக் அவர்கள், தற்போது குற்றப்பிரிவு சிபிசிஐடி கூடுதல் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே தொடர்ச்சியாக இந்த புதிய பணியிட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் சென்னை நகர காவல் நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

MUST READ