Homeசெய்திகள்சென்னைசெஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா

-

- Advertisement -

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யான் ஸ்ரீநாத் ஆகியோருக்கு சென்னை வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை நொளம்பூரில் நடைபெற்றது. கல்வி குழும தலைவர் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ்,பிரக்யாநந்தா,வைஷாலி, அர்ஜூன் கல்யான், மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு பள்ளி சார்பில் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற குகேஷ்,பிரக்யாந்தா,வைஷாலி ஆகியோருக்கு தலா 10 லட்சமும் அர்ஜூன் கல்யான், ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா 5 லட்சம் என மொத்தம் 40 லட்சம் ஊக்கத் தொகைதொகை வழங்கப்பட்டது.முன்னதாக அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு 1000 செஸ் போர்டுகள் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயரும் சொத்து வரி

பின்னர் கிராண்ட் மாஸ்டர்கள் அனைவரும் விழா மேடையில் தங்களது பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கவுரவித்தனர்.மேலும் மாணவர்களுடன் செஸ் வீரர்களும் அவரது பெற்றோர்களும் கலந்துரையாடினர்.

MUST READ