அதிமுகவை அழித்துவிட்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற பார்க்கிறது. திராவிட கட்சியான அதிமுக வலுவாக இருக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி உடைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல என விசிக தலைவா் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருந்தத்தில் அதிகமான முறைகேடுகள் நடக்கிறது. சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர். பீகார் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதுபோன்ற முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்தும், சிந்தூர் தாக்குதல் குறித்தும் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தும் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என கூறினார். அதேபோல, குடியரசு துணைத்தலைவர் பதவி விலகலில் சதி இருப்பதாக தெரிகிறது. அவரிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டிருக்கலாம். இது குறித்து சட்டத்தின்படி உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து அங்கு அந்த கட்சிகளை அழித்து வருகிறது. அது போலவே, தமிழகத்திலும் அதிமுக மீது ஏறி சவாரி செய்து அதிமுகவை அழித்து பாஜக காலூன்ற பார்க்கிறது. அதிமுக தமிழகத்தில் பெரியார், அண்ணா வழியில் வந்த ஒரு திராவிட கட்சி அதனால் தான் அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் இல்லை எனவும் திருமாவளவன் கூறினார்.
எனது கன்னி பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர்