spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை

சென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை

-

- Advertisement -

சென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை

சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகரும் ஊராட்சி மன்ற தலைவருமான பிபிஜி சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர். இவர் மீது 15க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக எஸ்சிஎஸ்டி மாநில பொருளாளராகவும் உள்ள பிபிஜி சங்கர், நேற்று இரவு கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

we-r-hiring

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது அவர் காரை வழிமறித்த மர்மகும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளது. உடனே காரிலிருந்து இறங்கிய அவர் தப்ப முயற்சித்துள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் பிபிஜி சங்கரை படுகொலை செய்துள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

 

MUST READ