
சென்னையை அடுத்த அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் (மே 31) பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, முகப்பேர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்களின் முயற்சி தடுத்து நிறுத்தம்!
அம்பத்தூர் பால் பண்ணைக்கு வர வேண்டிய ஆவின் பால் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பால் பண்ணைக்கு கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டத்தில் இருந்து வரும் பால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
“ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் பால் வரத்துக் குறைவாக இருக்கும் போது, தட்டுப்பாடு ஏற்படுகிறது. நான் பொறுப்பேற்பதற்கு முன்பு பால் தட்டுப்பாடு அதிகம் இருந்தது உண்மை தான். பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், இனி பிரச்சனை ஏற்படாது” என்றார்.