spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்"- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

“ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்"- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
File Photo

பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 10 நாட்களில் 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் தலைவர் தினேஷ் குமார் கார்கா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!

கடந்த மே 19- ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

இதில், 14,000 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் குமார் கார்கா தெரிவித்துள்ளார்.

மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை உயர வாய்ப்பு!

இது சந்தையில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் 20% என்றும் பாரத ஸ்டேட் வங்கித் தெரிவித்துள்ளது.

MUST READ