சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு, விமானத்திலிருந்து கீழே இறங்கிய, நூற்றுக்கும் மேற்பட்ட விமான பயணிகளை, விமான நிலைய அதிகாரிகள், கொட்டும் மழையில் நனைய விட்ட சம்பவம், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் புகார். சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு கோவையிலிருந்து வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை, மழையில் நனைய விட்ட, விமான நிறுவனம் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் புகார்.
சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இரவு 11.45 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர வேண்டும். ஆனால் அந்த விமானம் 9 நிமிடங்கள் முன்னதாக 11.36 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து தரை இறங்கியது.
அந்த நேரத்தில் சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. இந்த விமானத்திற்கு ஏரோபிரிஜ் ஒதுக்கீடு செய்யாமல், ஓபன் பே எனப்படும், திறந்த வெளி பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்குவதற்கு, லேடர் எனப்படும், சாதாரண படிக்கட்டு விமானத்தோடு இணைக்கப்டு, பயணிகள் பாதுகாப்பு இல்லாமல், மழையில் நனைந்து கொண்டே கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் வயதான பயணிகள், மிகவும் சிரமப்பட்டு கீழே இறங்கினார்கள். மழையில் நனைந்து கொண்டு, விமானத்திலிருந்து கீழே இறங்கும்போது, படிக்கட்டில் கால்கள் சறுக்கி விடுமோ? என்ற அச்சம் பயணிகளுக்கு ஏற்பட்டது.
இதைப் போன்ற மழைக்காலங்களில் கூடியமட்டும், பயணிகளை ஏரோபிரிஜ் வழியாக விமானத்திலிருந்து கீழே இறக்க ஏற்பாடுகள் செய்வார்கள். இல்லையேல், மேல் கூறையுடன் கூடிய லேடர் படிக்கட்டுகளை, விமானத்துடன் இணைத்து, பயணிகளை இறங்கச் செய்வார்கள். ஆனால் அந்த முறை கடைப்பிடிக்காமல், பயணிகளை இதை போல் மழையில் நனைந்து கொண்டு ஆபத்தான முறையில், நள்ளிரவு நேரத்தில் விமானத்தில் இருந்து கீழே இறங்க செய்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகளிலேயே பெரும் அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
116-வது பிறந்த நாள்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு நடிகர் சங்கத்தினர் மரியாதை
இது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர், சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு சில பயணிகள் இணையதளம் மூலம், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, விமானங்களில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு, லேடர்கள் பொருத்துவது, அந்தந்த விமான நிறுவனங்களின் பணியாகும். இதைப்போல் மழை பெய்து கொண்டு இருக்கும் போது, சாதாரண லேட்டர் பொறுத்தி பயணிகளை மழையில் நனைய விட்ட சம்பவம் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு இனிமேல் இதைப்போல் நடக்காமல் இருக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறுகின்றனர்.