சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மதுமதி என்பவரை எருமை மாடு ஒன்று சுமார் 200 மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்துசென்ற வீடியோ சமூக வளைதளத்தில் பெரிதும் பரவி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது சாலைகளில் கால்நடைகள் சுற்றிதிரிந்தால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புறங்களில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் ஏலத்தில் விடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை முதல்முறை பிடிக்கப்பட்டால் ரூ.5,000-ம் 2ஆம் முறை பிடிக்கப்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் 3-வது முறை பிடிப்பட்டால் மாடுகளை ஏலம் விடப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.