Homeசெய்திகள்சென்னைசென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்- பயணிகள் அவதி

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்- பயணிகள் அவதி

-

- Advertisement -

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

flight

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிக்கப்படுவதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.

அதிகாலை 1.30 மணி முதல் நுழைவுச்சீட்டு வழங்கலில் சிக்கல் எழுந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக்கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு புறப்பாடு சீரானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

MUST READ