Homeசெய்திகள்சென்னைமருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கோரிக்கை

மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கோரிக்கை

-

- Advertisement -

மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கோரிக்கைசென்னை அடையாறு காந்திநகர், கெனால் பேங்க் ரோட்டில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இந்திய புற்றுநோயியல் துறையில் முன்னோடியாக திகழ்ந்த டாக்டர்.வி.சாந்தா அவர்களது மார்பளவு திருவுருவசிலை மற்றும் நினைவக அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மருத்துவர் சாந்தாவின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மருத்துவர் சாந்தாவின் நினைவகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முதலமைச்சர் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலாளா உள்ளிட்டோர் மருத்துவர் சாந்தாவின் நினைவகத்தை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் பேசியதாவது, மருத்துவர் சாந்தா புற்றுநோய் குறித்தான விழப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.  அவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு சிகிச்சை  மட்டுமல்லாமல் புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும் என நினைத்தார். மேலும் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் புற்றுநோய்க்கான சிகிச்சை மையங்களை அமைத்தார். அங்கு புற்றுநோய் அறிகுறியோடு யாராவது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா என தொடர்ந்து பணிகளை மேற்கொண்டார்.  அவரது நினைவாக நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவர் பிறந்ததிலிருந்து இந்த புற்றுநோய் மையத்திற்கு அடிக்கல் நாட்டியதில் இருந்து அனைத்தும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.  நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார்கள். குறிப்பாக மத்திய மாநில அரசுகள் சார்பாக வாங்கிய விருதுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஔவையார் விருது பாரதியார் விருதுகளை மாநில அரசு வழங்கியுள்ளது. பத்மஸ்ரீ பத்ம விபூஷன் விருதுகளையும் பெற்று உள்ளார். பாரத ரத்னா மட்டும் தான் வழங்கவில்லை அதுவும் மாநில அரசு எழுதிக் கொடுத்தால் மத்திய அரசு வழங்க வாய்ப்புகள் உள்ளது. அதனை நாங்கள் முதலமைச்சரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம் முதலமைச்சரும் மாநில அரசு சார்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம் என தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

பேட்டி – கல்பனா பாலகிருஷ்ணன், இயக்குநர், அடையார் புற்றுநோய் மருத்துவமனை. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புற்றநோய் துறைக்கான மருத்துவர் ஹேமந்த்ராஜ், மருத்துவர் சாந்தா அவர்கள் படித்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். அவரது குடும்பத்தில் இரண்டு நபர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

மருத்துவர் சாந்தா 1955-ல் வேலைக்கு வந்தார். 200 ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தார்.  2021 வரைக்கும் 24 மணி நேரமும் இங்கே இருந்து சேவையை செய்துள்ளார்.  குழந்தைகளுக்கான புற்றுநோய் கண்டறியும் மையத்தை புதிதாக திறந்து வைத்தார்.  பலதரப்பு மையங்களை அவர்கள் தான் திறந்து வைத்தார்.  பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறந்த விருதுகளை வாங்கி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வந்து மருத்துவர் சாந்தாவின் திருவுருவச்சிலையை திறந்து வைத்து நினைவகத்தை திறந்து வைத்தது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் போனஸ் மார்க் – தேர்வுத்துறை அறிவிப்பு

 

MUST READ