Homeசெய்திகள்சென்னைதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் - வைகோ நம்பிக்கை

திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை

-

- Advertisement -

திமுக தலைமையிலான கூட்டணி  பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் - வைகோ நம்பிக்கைமே தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக  தலைமை கழகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவையின் கொடியினை மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஏற்றி  வைத்து இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “தமிழ்நாட்டில் 1967-ல் அண்ணா கோவை சிதம்பர பூங்காவில் மே தினத்தை கொண்டாடி அரசு விடுமுறை என அறிவித்தார். ஒன்றிய அரசு மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று நான் குரல் எழுப்பினேன். அன்றே அறிவித்தார்கள் ராம் விலாஸ் பஸ்வான் இரு அவைகளிலும் அறிவித்தார்.

மோடி அரசு தொழிலாளர்களை நசுக்கி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தொழிலாளர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் நாங்களும் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றுகிறார்கள். ஒரு சில கருத்து கணிப்பு அதிமுகவிற்கு சாதகமாகவும் ஒரு சில கருத்துக்கணிப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்கள். ஆனால் வாக்கு  எண்ணப்படும் பொழுது உண்மை நிலவரம் தெரியவரும் என்னுடைய நம்பிக்கை திமுக தலைமையிலான கூட்டணி  பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பது தான்.

we-r-hiring

மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “மே 4ம் தேதி தெரியும் என்னுடைய கருத்து திமுக ஆட்சியமைக்கும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்பது தான்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறியவர் நடிகர் அஜித் – அண்ணாமலை

MUST READ