- Advertisement -
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஏஹெச் பிளாக்கில் தொழிலதிபர் அருண் குப்தா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஏ.ஹெச் பிளாக்கில் தொழிலதிபர் அருண் குப்தா வீட்டில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அருண் குப்தாவுக்கு அம்பத்தூரில் ஸ்டீல் தொழிற்சாலை உள்ளது. மணலியில் உள்ள அவரது குடோனில் சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேனால் சாலையில் அருண் குப்தாவின் உறவினரான தொழிலதிபர் தீபக் குப்தா என்பவரது வீட்டிலும் சிறிது நேரம் விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.