கொட்டும் மழையில் பணி செய்யும் துப்புரவு தூய்மை பணியாளர்கள். கனமழை பெய்து வரும் நிலையில் துப்புரவு தூய்மை பணியாளர்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடுகளிலும் சாலைகளிலும் தேங்கும் குப்பைகளை தினமும் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் தரம் பிரித்து அகற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரத்தினால் சாலைகளில் குப்பைகள் தேங்காமல் கொசுக்களின் உற்பத்தி ஏற்படாமல் இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் தினமும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல பகுதிகளில் காலையில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் துப்புரவு தூய்மை பணியாளர்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொட்டும் மழையும் பொருட்படுத்தாது சாலைகளில் தேங்கிய குப்பைகளை அகற்றி வீட்டு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து குப்பைகள் வீடுகளிலும் சாலைகளிலும் தேங்காமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் தங்கள் வேலைகளை கவனித்து வருவது பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.