வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.

சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதில் இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மதியம் 1.15 மணியளவில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும் வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாறி மாறி கைகளாலும் அங்கு இருந்த நாற்காலிகளாலும் அடித்துக் கொண்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எழும்பூர் உதவியாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர்.
இந்த தாக்குதலில் வழக்கறிஞர்கள் விஜய்குமார், விமல், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டு ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.