- Advertisement -
தென்னக ரயில்வே கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை தென்னக ரயில்வே கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை பகுதியில் தென்னக ரயில்வே துறை சார்பாக மின் தொடர் வண்டிகள் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வாட்டர் டேங்க் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்கும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னக ரயில்வே கிடங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் கரும்புகைகள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


