spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபோலீசாருக்கு பறந்த உத்தரவு - சென்னை காவல்துறை அதிரடி

போலீசாருக்கு பறந்த உத்தரவு – சென்னை காவல்துறை அதிரடி

-

- Advertisement -

இரவு நேர பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது சென்னை காவல்துறை பிறப்பித்துள்ளது. குற்றச்செயல்களே நடக்க கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.போலீசாருக்கு பறந்த உத்தரவு - சென்னை காவல்துறை அதிரடிசென்னையில் இரவு நேரத்தில், 3 உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 135 சட்டம்- ஒழுங்கு போலீசார், 31 குற்ற தடுப்பு பிரிவு என, 500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இரவு பணி நேர போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் இரவு நேரங்களில் விபத்து ஏற்படாத வண்ணம் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் லேசர் விளக்குகள் யாரேனும் பயன்படுத்துகிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும் என்றும்,

இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க வேண்டும். ரோந்து வாகன போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போஸ்டர் ஒட்டுவதற்கு முன்பே தடுத்து நிறுத்த வேண்டும். ஒட்டிய பிறகு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க கூடாது. போஸ்டர் ஒட்டினால் அந்தந்த பகுதி இரவு நேர போலீசார் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, கோயம்போடு, 100 அடி சாலை என, எந்த சாலைகளிலும் பைக் ரேஸ் நடைபெறவேக் கூடாது. யாரேனும் பைக் ரேசில் ஈடுபட்டு தப்பிச் சென்றால் அடுத்த பாயின்டிற்கு தகவல் தெரிவித்து பிடிக்க வேண்டும் என்றும், பைக் ரேசில் ஈடுபடுவோர் யாருமே தப்பித்து போகக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கட்டாயமாக அவர்களை பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், 500 பேர் இரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு, 10 மணி முதல் 1:30 வரை சட்டம் ஒழுங்கு பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.  தொடர்ந்து குற்றம் தடுக்கும் விதமாக வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். திருநங்கைகளின் நகர்வுகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் இரவு பணி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.போலீசாருக்கு பறந்த உத்தரவு - சென்னை காவல்துறை அதிரடிஇரவு நேரங்களில் அவசர உதவி எண்ணிற்கு வரும் அழைப்புகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். ஏதுவும் நடக்கவில்லை என, அதிகாரிகளிடம் மழுப்பலான பதில் கூறக்கூடாது. மொபைல் போனிலேயே புகார்தாரரிடம் தொடர்பு கொண்டு பேசி முடித்துவிடக்கூடாது. சம்பவ இடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2– 4  இரவுப்பணியில் உள்ள போலீசார், வங்கிககள் ஏ.டி.எம். மையங்கள், ஜூவல்லரியில் உள்ள பாதுகாப்பு காவலர்கள் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களை நாம் எழுப்பி விட வேண்டும்,  ஒவ்வொரு போலீசாரும் மேற்கொள்ளப்படும் பணிகளை காவலன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  பூட்டப்பட்டுள்ள வீடுகளையும் கண்காணிக்க வேண்டும். ரோந்து வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் சைரன் ஒளி எழுப்பியபடி செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும். இரண்டு பேர் தங்கும் அறையில் கூடுதலாக படுக்கை போட்டு இளைஞர்கள் தங்கி உள்ளார்கள் என்றால் அவ்வறையை சோதனை செய்ய வேண்டும். சென்னையில் இரவு நேரங்களில் எந்தவிதமான குற்றச்செயல்களும் நடக்கவே கூடாது. பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களான பூங்காக்கள், மைதானங்கள், மெரினா உள்ளிட்ட இடங்களில் செயின், மொபைல் பறிப்பு நடக்க வாய்ப்பு உள்ளதால், அவ்விடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஓய்வு கொடுத்துதான் இரவு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதால் பணி நேரத்தில் ஓய்வு எடுக்ககூடாது. மொபைல்போனை பார்க்க கூடாது.

இரவு நேரத்தில் எந்த காவல் நிலையத்திலும் குற்றவாளிகளை வைத்திருக்கூடாது. வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக வேகமாக வாகனங்களை இயக்கி தப்பிச் செல்வோரை விரட்டிச் சென்று பிடிக்காமல் அடுத்த வாகன தணிக்கை மேற்கொள்ளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்து பிடிக்க வேண்டும் என்று இரவு பணி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்பு…

MUST READ