(செப்டம்பர் 20) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.82,000 த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மூன்று நாள்களாக குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.10,290-க்கும், சரவனுக்கு ரூ.480 அதிகரித்து 1 சவரன் தங்கம் ரூ.82,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாற்றில் ரூ.82,320க்கு விற்க்கப்படுவது இதுவே முதல் முறை. இனி வரும் நாள்களிலும் விலை குறையாது என கூறப்படுதால், நகை பிரியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.145-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடிக்க வந்த வளர்ப்பு நாயை விரட்டியத்த அரசு மருத்துவர் மீது தாக்குதல்!!
