(அக்டோபர் 1) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.87ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கும் விற்பனையாகிறது.

தங்கம் எப்போது குறையும் என ஆவலுடன் காத்திருந்த நகை பிரியர்களுக்கும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக நகை வாங்க காத்திருந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே ஒரு கிராம் ரூ.161-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வேற லெவல் டீசரை வெளியிட்ட ‘தேரே இஷ்க் மே’ படக்குழு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!