- Advertisement -
இன்றைய (நவ.11) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் கனிசமாக குறைந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மீண்டும் தடாலடியாக உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.220 உயர்ந்து 1 கிராம் ரூ.11,700க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.93,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனுடன், வெள்ளியின் விலையும் ஏற்றமடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 1 கிராம் ரூ.170 என விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஒரே நேரத்தில் உயர்வடைந்துள்ளதால், திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தில் நகைகள் வாங்கத் திட்டமிட்டிருந்த சாமானிய மக்களிடம் விரக்தி நிலவுகிறது.


