சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 57,440-க்கு வர்த்தகம் ஆகிறது.
சென்னையில் நேற்று 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் இன்று 2வது நாளாக ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.240 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.7,180-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,440-க்கு விற்பனையாகிறது. இதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.99-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.99 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது.


