spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு - தயாநிதி மாறன்

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு – தயாநிதி மாறன்

-

- Advertisement -

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு - தயாநிதி மாறன்

துணை முதலமைச்சரின் பிறந்த நாளை திமுகவினர் பொதுமக்களுக்கு அன்னதானம், பரிசு பொருட்கள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் தாய்சேய் நல  மருத்துவமனையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை பிறந்துள்ள 14 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களையும், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களையும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.

we-r-hiring

துணை முதலமைச்சர் பிறந்த நாளில் தனது குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் வேளையில் தங்கம் பரிசாக குழந்தைக்கு வழங்கப்பட்டது இன்னும் மகிழ்சசியாக இருப்பதாக பிறந்த குழந்தைகளின் பெற்றோர் உறவினர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இன்று இரவு 12 மணி  வரை பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்கம் மோதிரம் பரிசாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

MUST READ