Homeசெய்திகள்சென்னைஅறிமுகம் இல்லாதவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பெரியவருக்கு வாழ்த்து குவிகிறது

அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பெரியவருக்கு வாழ்த்து குவிகிறது

-

- Advertisement -

நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்து சொல்லி புத்தாண்டை கொண்டாடும் மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லாமல் சாலையில் செல்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து சொல்லும் முதியவரின் செயல் பாராட்டு பெற்றுள்ளது

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவரும் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியான தருணத்தில்

திருவொற்றியூரில் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் ஒருவர் வீட்டு வாசலில் சாக்லேட் வாங்கி வைத்துக்கொண்டு சாலையில் போவோர் வருவொரையெல்லாம் அழைத்து ஹேப்பி நியூ இயர் வாழ்த்து சொல்லுவது பாராட்டைப் பெற்றுள்ளது

பரபரப்பான சூழ்நிலையில் வீடுகளில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் புத்தாண்டை முடித்து காலையில் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில் திருவொற்றியூர் சீனிவாசபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் நாகப்பன் வீட்டு வாசலில் சாக்லேட்டுகளை தட்டில் வைத்து அமர்ந்து கொண்டு அறிமுகம் இல்லாத இருசக்கர வாகனத்தில் செல்பவர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களை அழைத்து அவர்களுக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்துக்களை சொல்லுவது பாராட்டை பெற்றுள்ளது

MUST READ