தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த 39 வயதுடைய இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் திடீரென மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் செயல்படும் சவிதா மருத்துவ கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் கிராட்லின் ராய். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் ரவுன்சில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மருத்துவர் கிராட்லின் ராய் உயிரிழந்தார். இந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 39 வயதுடைய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் திடீரென மாரடைப்பால் உயர்ந்திருப்பது மருத்துவர் மட்டுமல்லாமல் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இருதய அறுவது சிகிச்சை நிபுணரான டாக்டர் கிராட்லின் ராய் தனது இருதயத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தெரிந்திருந்தும் அவருக்கு திடீரென மாரடைப்பு வந்தது அதிர்ச்சி ஏற்படுத்திருக்கிறது. அவருக்கு மாரடைப்பு வர காரணம் என்ன, அவருக்கு ஏற்கெனவே இருதய தொந்தரவு இருந்திருந்தால் அதனை கட்டாயம் அவர் கவனித்து இருப்பார் இருந்த போதிலும் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இளம் வயதிலேயே ஒரு இருதய மருத்துவர் உயிர் இழந்து இருப்பது மருத்துவர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதியதாக நேரிடையாக பணி ஆணைகள்…2,014 பேருக்கான ஒரு மாத பயிற்சி…