இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நகர்புற பகுதிகள் வசதிகளுடன் உள்ளது. புதியதாக நேரிடையாக பணி ஆணைகள் பெற்ற 2,014 பேருக்கான ஒருமாத பயிற்சி வகுப்பை அமைச்சர் கே.என்.நேரு வண்டலூரில் துவக்கிவைத்தாா்.நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கிவைத்தனர். இளநிலை பொறியாளர், உதவிப்பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த 2014 பேர் அண்ணா பல்கலைக்கழகம் உதவியுடன் ஒரு மாதம் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பயிற்சி வழங்கப்படும்.
படிப்பது வேறு மக்களிடம் நேரிடையாக பணி செய்வது வேறு ஐ.ஏ.எஸ் ஆனாலும் மக்கள் பணி செய்த அதிகாரிகளிடம் பயிற்சி பெற்று தான் உயர் பதவி வகிக்க முடியும் அதுபோல் சிறப்பான பயிற்சியே உங்களை வழிநடத்தும் மற்ற துறைகளை காட்டிலும் பொதுமக்களுடன் நேரிடையான தொடர்பு உள்ள துறையில் நீங்கள் மக்களால் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இணையாக அதிகாரிகளான உங்களுக்கும் மக்களுடம் மரியாதை உண்டு. 10 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றினால் தமிழ்நாடு வளர்ச்சி பெரும். தமிழகத்தில் நகர்புறத்தில் 60 சதவீதம் பேர் வசிக்கிறார்கள், வந்து செல்வோர் உள்ளிட்ட 70 சதவிகிதம் பேர் உள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நகர்புறப் பகுதிகள் வசதிகளுடன் உள்ளது. நேர்மையான முறையில் பணிவாய்ப்பு பெற்ற நீங்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று மக்கள் சேவை புரியுங்கள் உங்களை அரசு வரவேற்கிறது என்றார்.
வாக்குகளில் முறைகேடு… ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் – கிருஷ்ணசாமி கண்டனம்
