கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தினர்.
சென்னை திருவான்மையூர் கலாஷேத்ரா அகாடமியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலாஷேத்ரா அகாடமியில் 30 மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கலாஷேத்ரா மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு.
அகாடமி வளாகத்தில் ஏதும் இடையூறு ஏற்பட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் வழங்கியது மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது.
கலாஷேத்ரா முதல்வர் இயக்குனர் துணை இயக்குனர்கள் உட்பட ஆறு பேரிடம் நேற்று விசாரணை நடத்தினர். மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் மனித உரிமைகள் ஆணையம் இரண்டாம் நாளாக இன்று விசாரணை நடத்தியது.
பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவிகள் புகார் முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மூன்று பிரிவுகளில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று மனித உரிமைகள் ஆணைய காவல் துறை எஸ் பி மகேஸ்வரன் தலைமையில் குழு கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி அரங்கில் 30 மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த விசாரணை முடிவில், இனி அகாடமியின் வளாகத்திற்குள் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் புகார் தெரிவிக்கும் வகையில் மாணவிகளுக்கு தொலைபேசி எண்ணை ஆணைய அதிகாரிகள் வழங்கி இருக்கின்றனர்.
மேலும், இனி மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மாணவிகளிடம் நடத்திய விசாரணை முக்கியமாக பார்க்கப்படுகிறது.