spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து...

சென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது!

-

- Advertisement -

சென்னை கோடம்பாக்கம், பகுதியை சேர்ந்த 46 வயது பெண் உயர்நீதிமன்ற  வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்துள்ளார்.

சென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது!அப்போது அவ்வழியே காரில் வந்த அகில பாரத இந்து அமைப்பின் மாநில துணை தலைவர் சுந்தரம் என்கிற மாயாஜி (47) திடீரென காரை நிறுத்தி பெண் வழக்கறிஞரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

we-r-hiring

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதையடுத்து மாயாஜி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் இதுகுறித்து உடனடியாக கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து மாயாஜி மீது பெண் களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், BNS- 75(2)  உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்த போலீசார் அவரை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பிரியாணி கடையில் மாமுல் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ