- Advertisement -
திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி செலுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைதுதிருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் இவருக்கு சொந்தமான வீடு திருவேற்காட்டில் உள்ள நிலையில் திருவேற்காடு நகராட்சியில் அதற்கான வரி கட்டுவதற்காக மனு அளித்து இருந்தார். வீட்டு வரி செலுத்த ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் தலைமையில் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தபோது அதனை வாங்கிய பில் கலெக்டர் உமா நாத் என்பவரை கைது செய்தனர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் உமா நாத்தை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.