கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை கொடுத்துவிட்டு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்று பறைசாற்றுவர்கள் திமுகவினர் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரவித்துள்ளாா்.சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் முத்தமிழறிஞரின் செம்மொழி நாள் விழா நடைபெறுவதை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரங்காலப்பயிர் வளரட்டும் – ஆதவன் கலைஞரை புகழட்டும் என்ற தலைப்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே சேகர்பாபு தலைமையில் 28 இணையர்களுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 28 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லீம் என மூன்று மதத்தைச் சேர்ந்த 28 தம்பதிகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்த திருமணத்தில் இந்து திருமணம் மட்டும் நடைபெறவில்லை எனவும் எண்ணிக்கை அடிப்டையில் தமிழகத்தில் பல மதங்கள் இருந்தால் கூட அனைத்து மதங்களும் பரவி இருக்கிற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுத்தறிவு திருமணத்தை நான் நடத்தி வைத்து உள்ளேன். எங்கள் பகுதியில் உள்ள ஐயா் busy ஆன ஐயர் தான் எனவும் அப்படி சொன்னால் தான் நமது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
எனக்கு தெரிந்த மும்மூர்த்தி பெரியார்,அண்ணா,கலைஞர் தான் ஆனால் சேகர்பாபுவிற்கு பல மும்மூர்த்தி தெரியும் என கூறினார். கிறிஸ்துவ திருமணத்தின் போது பைபிள் ஓதுவார்கள். அது தமிழில் தான் ஓதுவார்கள். அதே போல இஸ்லாமிய திருமணத்தின் போது மணமக்கள் இடம் ஒப்புதல் பெறும் போது தமிழில் தான் கேட்பார்கள்.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்துகள் நான் உயர்மட்ட குடியாக தான் இருந்து இருக்கிறோம் என கூறி திருமணத்தின் போது சொல்ல கூட சமஸ்கிருத மந்திரத்தை கூறினார். முதலமைச்சரின் திராவிட ஆட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது. குடமுழக்கு என்ற சொல் தமிழ் ஆனால் கும்பாபிஷேகம் என்று தான் மக்கள் செல்வார்கள். இந்துகளில் உள்ள குறைகளை நான் தான் பேச முடியும் இந்து தான் இந்துகளில் உள்ள குறைகளை பற்றி பேச முடியும். ஒரு மனிதன் என்ன உடை அணிய வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது அவரது பொறுப்பு தனி மனிதன் என்ன கடவுளை கும்பிட்ட வேண்டும் என்பது அவரது உரிமை அதில் மாற்று கருத்து இல்ல என கூறினார்.
அதே போல தமிழ்நாட்டில் உள்ள கடவுளுக்கு தமிழ் மொழியில் தான் ஆராதனை இருக்க வேண்டும். வைணவ கோயில்களில் தமிழில் தான் ஓதப்படுகிறது. சைவ கோயில்களில் சமஸ்கிருதம் தாண்டவம் ஆடுகிறது. சேகர்பாபு அதனை அதன் விருப்பப்படி விட்டுவிட்டார். தமிழகத்தில் முருகன் தான் பிடித்த கடவுள் என்று ஆய்வாளர் என்ற முறையில் தான் இதை கூறுகிறேன். தமிழ் கடவுள் முருகன் அதற்கான அடையாளங்கள் உள்ளது. தமிழ் பெருவளத்தான் என எனது பெரிய மகனுக்கு பெயர் வைத்தேன் ஆனால் குமரன் என அழைத்தார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழனியில் முருகன் மாநாடு நடத்தினார்கள். அதற்கு முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு என பெயர் வைத்தார்கள். தமிழ் கடவுள் முருகனுக்கு மூன்று மொழி தெரியும் என்பதால் தான் முத்தமிழ் முருகன் மாநாடு என பெயர் வைத்தார்கள். இன்று திருமணம் செய்யும் இணையர்கள் ஒருவரை ஒருவரை விட்டு கொடுத்து வாழ வேண்டும் என தெரிவித்தார்.அமைச்சர் சேகர்பாபு மேடையில் பேசும் போது, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் நிகழ்ச்சியில் கமரக்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை கொடுத்துவிட்டு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்று பறைசாற்றுவர்களின் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் தொண்டர்களால் தான் திமுக வலிமையாக உள்ளது என்று கூறினார். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனையை நீங்களே திருத்திக் கொள்ள வேண்டும் மூன்றாவது ஒரு நபரை அனுமதிக்க கூடாது, ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழுங்கள் என்று அறிவுறுத்தினார்.
விழாவில் மாநகராட்சி மேயர் பிரியா உட்பட இணையர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.