Homeசெய்திகள்சென்னைவாய் குடுத்து மாட்டிக்க நான் தயார் இல்லை - நடிகை கஸ்தூரி

வாய் குடுத்து மாட்டிக்க நான் தயார் இல்லை – நடிகை கஸ்தூரி

-

வாய் குடுத்து மாட்டிக்க நான் தயார் இல்லை - நடிகை கஸ்தூரிதெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த கஸ்தூரி எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு கையெழுத்திட்டு வருகிறார்.

இன்று காலை கையெழுத்திட்ட பின் காவல் நிலைய வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த 4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன் இரண்டு படம் இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப்பட்டதோடு மட்டுமல்லாமல் எனது மகனின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. எனவே காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன்.

திங்கட்கிழமை தான் இது விசாரணைக்கு எடுத்து கொள்ளபட உள்ளது. இந்த நிலையில் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. இசை வாணி விவகாரதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்து நீங்கள் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம் என்றார் கஸ்தூரி.

‘சூர்யா 44’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

 

MUST READ