நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது தனது 45வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் சூர்யா. இதற்கிடையில் இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். சூர்யாவின் 44வது படமான இந்த படத்திற்கு சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னரே சூர்யா 44 படத்தின் பாடல் ஒன்றுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடி இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி அடுத்து வரப்போகும் பாடலானது சூர்யா மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் நடனமாடும் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாடலானது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -