Homeசெய்திகள்சென்னைபுரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

புரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

-

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொஃபஷனல் கூரியர் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் 10 -த்தில் இருந்து 30 – க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சுமார் 25- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ப்ரொபஷனல் கொரியர் எனப்படும் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

தனியார் போஸ்ட் ஆபீஸ் போன்று செயல்படும் இந்த புரொஃபஷனல் கூரியர் இந்தியா முழுவதும் 70,000 இடங்களுக்கு பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் இந்த சேவையை செய்து வருகிறது.

புரொஃபஷனல் கூரியரிடமிருந்து உரிமம் பெற்ற பல உரிமையாளர்கள் இந்தியா முழுவதும் ஹப் என்ற அடிப்படையில் ஒரு அலுவலகத்தை அமைத்து அதன் மூலமாக பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

அந்த அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்திலும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு புரொஃபஷனல் கூரியர் ஹப் அலுவலகத்திலும், கிண்டி மற்றும் பாரிஸ் உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

11 மணி அளவிலிருந்து இந்த சோதனையானது வருமானவரித்துறை அதிகாரிகளால் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அனைத்து கிளைகளிலும் அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுப்பட்டு வருக்கிறார்கள்.

தற்போது தலைமை அலுவலகத்தில் மட்டும் 10 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்ளே நுழைந்து வருமான வரி சோதனையானது நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாகவே இந்த கூரியர் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. அதனை தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து அவர்கள் வெப்சைட்டிலேயே இது போன்ற பணப்பரிவினைகளை செய்யவில்லை என்றும் அது போன்ற எதையும் நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் விளம்பரங்கள் எல்லாம் செய்திருந்தார்கள். இருந்தாலும் அது போன்ற குற்றச்சாட்டு என்பது அடிக்கடி வந்த வண்ணம் இருந்தது.

அதே நேரத்தில் புரொஃபஷனல் கூரியர்கள் வாங்கும் பணத்திற்கும், கொரியர் செய்யும் பணத்திற்கும் இடையே பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதாகவும், வரவு செலவு கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து குறிப்பிட்ட உரிமம் வாங்கி செயல்படும் சில புரொஃபஷனல் கூரியர் அலுவலகங்களில் அந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை தொடங்கி இருப்பதாகவும் விசாரணை அடிப்படையில் இந்த இடங்கள் என்பது அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ