சிட் பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மனைவியுடன் தற்கொலை முயற்சி மேற்க் கொண்டுள்ளாா்.
சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தளபதி பாஸ்கர் இவா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநில பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி(45) தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த தளபதி பாஸ்கர் சிவலிங்கா சிட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தை திருவள்ளூர், ஆவடி, குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கொளத்தூர், மயிலாப்பூர் என பல்வேறு பகுதியில் நடத்தி வந்துள்ளார். அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் பிரச்சனை அதிகமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு 2 மணி அளவில் வீட்டில் பாஸ்கா் மற்றும் அவரது மனைவியும் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதனை கண்ட அவரது மகன், உறவினர்களின் உதவியுடன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை முயற்சி தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! அதிமுக சோலி முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!



