Homeசெய்திகள்சென்னைகவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?

கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?

-

கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா ?திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவரைப்பேட்டையில் 3 நட்டு, போல்ட், பொன்னேரியில் 6 நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்டதால் தான் விபத்து நடந்ததா என கொருக்குப்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தண்டவாளம் மாறும் இடத்தில் நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம் மாறிச் சென்றுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் : மேல்படுக்கை விழுந்து சிறுவன் காயம்

MUST READ