சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு பிறந்த குழந்தைக்கு என சத்துள்ள விதவிதமான சட்னி செய்து அசத்திய பெண்கள்.மார்ச் 30 உலக இட்லி தினத்தை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் 100 வகையான சட்னி தயாரித்து லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். மாதவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 1 நிமிடத்தில்100 வகை சட்னிகள் சாதனை நிகழ்ச்சியை,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் H V.ஹண்டே துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா, பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி க.மலிகா காமராஜ், பாரதியாரின் பேத்தி கவிஞர் உமா பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மிக்ஸி ஜாருடன் சட்னி பொருட்களுடன் வரிசையாக தயார் நிலையில் இருந்த பெண்கள் விசில் அடித்தவுடன் சூறாவளிபோல் சட்னி தயாரித்தனர். மாதவரம் ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரும் மதத்தினரும் வசித்து வரும் நிலையில் சகோதர, சகோதரி உணர்வுடன் அனைவரும் ஒன்றிணைந்து குடியிருப்பு நல சங்கம் சார்பில் இட்லி தினத்தை முன்னிட்டு சட்னி தயாரித்தனர்.
60 வினாடிகளில் 100 விதமான சட்னி தயாரிக்க 100 மகளிர் குழுவினரை பத்து நாட்களுக்கு முன்பாகவே தயார் செய்து ஒரு குழுவுக்கு 10 பெண்கள் என பிரித்து வானவில் போன்று 7 நிறங்களில் புடவை அணிந்து இடம் பெற்றனர். காய்கறி சட்னி , பழ வகை சட்னி, கீரை சட்னி ,வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, குழந்தைகள் சட்னி, உலர்ந்த பழங்கள் சட்னி , மருத்துவ குணம் உள்ள சர்க்கரை நோய் சட்னி ,கொலஸ்ட்ரால் குறைப்பதற்கான சட்னி அது மட்டுமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் உணவிற்கு ஏற்ற சத்தான சட்னி என வகைவகையான நூற்றுக்கு மேற்பட்ட சட்னிகள் தயாரித்தனர்.
மேலும்,கோங்குரா சட்னி,முருங்கை இலை சட்னி,பொன்னாங்கண்ணி சட்னி, மேத்தி சட்னி,பச்சை மாங்காய் வேர்க்கடலை சட்னி,தயிர் வேர்க்கடலை சட்னி,ரசம் வேர்க்கடலை சட்னி,கருப்பு மிளகு வேர்க்கடலை சட்னி, தயாரித்து அசத்தினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஐந்து வகையான மொழிகளில் பெண்கள் பங்கேற்றனர்.
ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், மலையாளம், உருது, பஞ்சாபி, பெங்காலி அனைத்து வகையான மக்களும் இருப்பதனால். சகோதரத்துவத்தோடு பழகி அன்பு பாராட்டி வருவதாக ஏற்பாட்டாளர் தெரிவித்தனர்.இதனை அடுத்து சட்னியை சுவைத்து பாராட்டிய அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா, தமிழர்களின் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் அறியும் வகையில் 60 வினாடிகளில் நூறு வகையான சட்னி தயாரித்ததை பாராட்டினார்.
ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நிருபித்து உள்ளார்கள். மகளிர் தினத்திற்காக உலக இட்லி தினத்தை முன்னிட்டு இந்த முயற்சி சாதனை படைத்துள்ளது. பெண்கள் ஆர்வமாக பங்கேற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார். ஏற்கனவே இட்லி தயாரித்து உலகம் முழுவதும் சாதனை படைத்த நிலையில் தற்போது விதவிதமான சட்னி செய்து சாதனை படைத்தது மாதவரம் பகுதிக்கு பெருமை சேர்த்ததாக தெரிவித்துள்ளாா். ரத்த கொதிப்பு இருப்பவர்கள் சட்னி சாப்பிடக்கூடாது என்ற நிலையில் அவர்களுக்கென்று சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு என்று சட்னி தயாரித்தது புதுமையாக இருந்ததாக தெரிவிதாா்.
ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு