spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

வடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

-

- Advertisement -

புது வண்ணாரப்பேட்டையில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி ஓனம் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.வடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

வரும் வெள்ளிக்கிழமை  5ம் தேதி  கேரள மக்களின் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில்  புது வண்ணாரப்பேட்டை   சங்கத்தில்  மலையாள பெண்கள்  அத்தப்பூ கோலமிட்டு   கேரளா செண்டை மேளம் முழங்க திருவாதிரை நடனம் ஆடினர். கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

we-r-hiring

உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.  இந்த பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

பெண்கள் விதவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். மகாபலி ராஜாவை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஓணம் பண்டிகை 5 தேதி அன்று வீட்டில் கொண்டாடப்படுவதால் வடசென்னை மலையாளி அசோசியேசன் சார்பில் கேரள நாட்டில் சமைக்கும் பாலக்காடு மட்டை அரிசி, நேந்திரம் சிப்ஸ், கேரளா அப்பளம், ஏலக்காய், பாசிப்பருப்பு, வெல்லம், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட 21 வகையான உணவுப் பொருட்களை 1000 பேருக்கு வழங்கப்பட்டன.

ஜாதி மத வேறுபாடு இன்றி தமிழர்களுடன் கேரளா மாநிலத்திலேயே விட சென்னையில் அதிக உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக தெரிவித்தனர். பத்து வகையான பூக்களை கொண்டு விதவிதமான வண்ண மலர்களால் கேரளா நாட்டில் அத்தப்பூ கோலம் ஈடுவார்கள். ஆனால் அது போன்று அதிக பூக்கள் சென்னையில் கிடைக்காததால் சென்னையில் கிடைக்கும் பூக்களை கொண்டு வண்ண வண்ண மலர்களால் விதவிதமான அத்திப்பூகோலம் போட்டு  கொண்டாடுகின்றனர்.

வசூலில் அடித்து நொறுக்கும் ‘லோகா’…. தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை!

MUST READ