spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஎண்ணூர் துறைமுகத்தின் வருவாய் ரூ.1000 கோடியை தாண்டியது!

எண்ணூர் துறைமுகத்தின் வருவாய் ரூ.1000 கோடியை தாண்டியது!

-

- Advertisement -

எண்ணூர் துறைமுகத்தின் வருவாய் ரூ.1000 கோடியை தாண்டியது!

எண்ணூர் காமராஜர் துறைமுகம் மொத்த வருமானம் முதல்முறையாக ரூ.1000 கோடியைத் தாண்டியுள்ளதாக துறைமுக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Ennore Container Terminal, Chennai, Tamil Nadu

எண்ணூர் காமராஜர் துறைமுகம் 2022-2023 நிதியாண்டில் 12.30% வளர்ச்சி விகிதத்துடன் 43.51 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டுள்ளது. காமராஜர் துறைமுகம் தொடங்கியதில் இருந்து ஒரு நிதியாண்டில் கையாளப்பட்ட அதிகபட்ச சரக்கு இதுவாகும். காமராஜர் துறைமுகம் மொத்த வருமானம் முதல்முறையாக ரூ.1000 கோடியைத் தாண்டியுள்ளதாக காமராஜர் துறைமுகம் நிர்வாகம் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அக்டோபர் 1999 ல் நிறுவனங்கள் சட்டம் 1956 ன் கீழ் எண்ணூர் போர்ட் லிமிடெட் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் பன்னிரெண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். அரசுடைமையாக்கப்பட்ட முதல் துறைமுகமும் இதுவே. இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் நடுவண் அரசிடமும், மீதம் 32 சதவிகிதம் சென்னைத் துறைமுகமும் கொண்டுள்ளன. இது 86 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

MUST READ