ஒன்றிய பாஜக அரசை கண்டித்து போராட்டம்- முத்தரசன் கைது
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் முத்தரசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்.

விலைவாசி உயர்வு வேலையின்மை,மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தல்,இந்தியை திணித்து தமிழை புறக்கணித்தல் என்று மக்கள் விரோத கொள்கைகளை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தி வருவதாகவும், இதற்கு கட்டணம் தெரிவித்தும் பாஜக அரசே வெளியேறு என்ற முழக்கங்களுடன் சென்னை கடற்கரை காவல் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பாடையில் ஏற்றி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் திடீரென போக்குவரத்து நெரிசல் ஈடுபட்டது. உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் முத்தரசன் உட்பட சுமார் 100 பேரை கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “மக்கள் விரோத போக்குகளை கடைப்பிடித்து வரும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். இந்தியா கூட்டணி பாஜக அரசை வெளியேற்றும். ஜி 20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது. சனாதனம் குறித்து எல்லோரும் பேசி வருவதை தான் உதயநிதி பேசினார் . அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை, வேறு வேலை ஏதும் இல்லாததால் விளம்பரத்திற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.


