Homeசெய்திகள்சென்னைரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது

ரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது

-

ரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது

ரூ.16 கோடி மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2021 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.16 கோடி மோசடி எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார். பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக்கூறி ஏமாற்றியதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக ரவீந்தர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை ஆவணங்கள்‌ மோசடி பிரிவில்‌ (15101) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ