- Advertisement -
சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நள்ளிரவு மிதமான மழை பெய்த நிலையில், காலையில் பலத்த இடியுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று சென்னை மாவட்டத்தில்
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.