சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குரங்கம்மை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
1958 ம் ஆண்டு ஆப்பிரிகா வன பகுதி குரங்குகளிடம் கண்டறியபட்ட குரங்கம்மை தற்போது அமேரிக்கா ஐரோப்பா சீனா போன்ற 116 நாடுகளில் பரவியிருப்பதாகவும், இதனால் உலக சுகாதார நிலையம் இதனை அவசர நிலை பிரகடனமாக அறிவித்துள்ளதால் ஒன்றிய அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை மதுரை திருச்சி கோவை ஆகிய நான்கு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை துவங்கபட்டுள்ளது .
கொரனா காலம் போல் சர்வதேச விமான பயணிகளின் உடல் வெப்பம் பரிசோதிக்கபட்டு காய்ச்சல் கண்டறியபட்டால் விமான நிலையத்திலேயே தனிமை படுத்தி முதலுதவி செய்து பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபடுவதாகவும், இதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தனிமை படுத்தபட்ட வார்டுகள் அமைக்கபட்டுள்ளதாகவும், இதேபோல் கோவை மதுரை திருச்சி ஆகிய விமான நிலையங்களின் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 10 படுக்கைகளுடன் தனிமை படுத்தபட்ட வார்டுகள் அமைக்கபட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் குப்பளம் காய்ச்சல் போன்ற குரங்கம்மை அறிகுறிகள் கண்டறியபட்டால் வீட்டிலேயே தங்கிவிடாமல் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் ஏன கேட்டுகொண்டார். அதேபோல் தமிழக அரசு விமானம் மற்றும் கப்பல் மூலம் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக பரிசோதித்து வருவதாகவும், கொரனா போன்று குரங்கம்மை பெரியளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் கொரனா காலம் போல் குரங்கம்மையையும் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மருத்துவர்கள் கையாண்டு சிகிச்சை அளிப்பார்கள் என்றார்.
மேலும் தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு தீவிரமாக கண்கானிக்கபடுவதால் கொல்கத்தா போன்ற சம்பவம் இங்கு நிகழாது என்றார்.