spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆசிாியர்கள் மாணவர்களிடம் நண்பர்கள் போல் நடந்துக் கொள்ள வேண்டும் - முதல்வர் அறிவுரை

ஆசிாியர்கள் மாணவர்களிடம் நண்பர்கள் போல் நடந்துக் கொள்ள வேண்டும் – முதல்வர் அறிவுரை

-

- Advertisement -

பள்ளிக் கல்வித்துறைச் சாா்பில்  நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சா்  மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.மாணவா்களிடம் நண்பா்கள் போல் ஆசிாியா்கள் நடந்துக் கொள்ள வேண்டும் - முதல்வர்  அறிவுரைபள்ளிக் கல்வித்துறைச் சாா்பில்  நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சா்  மு.க.ஸ்டாலின் 2,715 புதிய ஆசிாியா்களுக்கு நுழைவுநிலை பயிற்சியை தொடங்கி வைத்ததோடு, ரூ.277 கோடி மதிப்பீட்டில் 243 புதிய பள்ளிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். முதல்வா்.  மேலும், ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களையும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

பின்னா், தொடா்ந்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்துவரும் முப்பெரும் விழாவில், “ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுக் கொடுப்பவர்கள் அல்ல. தங்கள் அனுபவத்தையும் சேர்த்து கற்பிப்பவர்கள். இன்றைய சூழல் பாடம் நடத்துவது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி மாணவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்ற வேண்டும். அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடப்பது போல் தேவையற்ற குப்பைகளும் நிறைந்துள்ளன. எதுவாக இருந்தாலும் கூகுள், ஏ.ஐ.யிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கக் கூடாது. தொழில்நுட்ப வளா்ச்சியை குறைகூறாமல் தேவையானதை மாணவா்களை படிக்க வைப்பது ஆசிாியா்களின் கடமை.

we-r-hiring

மாணவா்களிடம் நண்பா்கள் போல் ஆசிாியா்கள் நடந்துக் கொள்ள வேண்டும். அறிவியல், கணிதம் பாடங்களை முழுமையாக அறிந்துக் கொள்ளும் வசதி இன்றைக்கு உருவாகியுள்ளது. மாணவா்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் அன்பாக கூறினால் புரிந்துக் கொள்வாா்கள். எல்லோா் வீட்டிலும் ஓரே சூழல் இருக்காது என்பதால் அனைவரையும் ஒரே அளவுக் கோலுடன் பாா்க்க கூடாது. மாணவா்கள் இப்படித்தான் இருப்பாா்கள் என்ற முன் முடிவோடு ஆசிாியா்கள் அணுகக் கூடாது. பெற்றோரை விட அதிக நேரம் மாணவா்கள் ஆசிாியா்களுடன் தான் இருக்கிறாா்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்…உடனடி நடவடிக்கை கோரிக்கை

MUST READ