spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது

-

- Advertisement -

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைதுகல்லூரி காலம் முதல் 6 ஆண்டுகளாக காதலித்து, தனிமையில் வாழ்ந்து, திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த தனியார் வங்கி மேளாளரை கைது செய்தனர்.

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைதுசென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு படித்து வந்தபோது ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

we-r-hiring

சதீஷ்குமார் தற்போது தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு கடந்த 2023ம் ஆண்டு தெரியவந்துள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைதுபின்னர் மூன்று மாதத்தில் சதீஷ்குமார் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறி மறுப்பதாகவும் இது குறித்து அந்தப் பெண் சதீஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது தான் வேலை செய்யும் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரை சதீஷ் காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதோடு அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை சதீஷ் பலமுறை கட்டாயப்படுத்தி ஒன்றாக இருந்துள்ளதாகவும், கல்யாண மண்டபத்தை பதிவு செய்வதற்கு முன் பணமாக அந்தப் பெண்ணிடம் சதீஷின் அம்மா மல்லிகா கேட்டதின் பேரில் அந்த பெண் அவரது வீட்டிற்கு தெரியாமல் வங்கியில் லோன் எடுத்து பணம் கொடுத்து அதற்கு வட்டியுடன் 1.70 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காதலித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் தன்னுடன் தனிமையில் இருக்கும்போது தனக்குத் தெரியாமல் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்ததாகவும் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைதுஇதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்லாவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக 296(b), 115(2), 64, 318(2), 351(2), ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ